Graubünden (கிறவ்புண்டென்) மாநிலத்தில் உள்ள இனப்பாகுபாட்டு ஒதுக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை நிலையத்திற்கு நல்வரவாகுக
இந்த ஆலோசனை நிலையம் கிறவ்புண்டென் மாநிலத்தில் வாழும் அனைத்து தனிப்பட்ட நபர்களுக்கும், அவர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டால், ஆக்கபூர்வமான ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்கும். நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள், அதேவேளை உறவினர்கள், ஆண் பெண் சாட்சிகள் அல்லது வேறு மூன்றாம் நபர்கள் இந்த ஆலோசனை நிலையத்தை அணுகலாம். அத்துடன் அடையாளம் காட்டாத பதிவுகளும் இங்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
எமது ஆண் பெண் ஆலோசனையாளர்கள் பின்வரும் அடிப்படைக் கொள்கைகளைக் கொண்டிருப்பார்கள்:
- மிகுந்த மரியாதையான சூழமைவு: ஆலோசனை தேடுவோருடன் திறந்த மனதுடன் பழகுதல், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மரியாதையுடன் நடத்துதல்.
- பக்கச்சார்பு:
ஆலோசனைநிலைய ஊழியர்கள் பக்கச்சார்பாக தொழில்புரிவதுடன் தமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு செயற்படுவார்கள். குறிக்கோள் என்னவென்றால், ஒதுக்குதல்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களை வலுப்படுத்துவது மற்றும் ஆதரிப்பது, அதேபோன்று அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதுமாகும்.
- சுயஉரிமைகளைப் பாதுகாத்தல்:
ஆலோசனையை நாடும் நபரின் வெளிப்படையான ஒப்புதலுடன் மட்டுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- வலைத்தொடர்பு:
சிக்கலான நடைமுறைகள் அல்லது நிர்வாக உள்ளக விடயங்களில் இனவெறி ஒதுக்குதல்கள் இடம்பெற்றால், ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தகுந்தவாறு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்க மேலதிக விசேட சேவைகளை அழைத்தல்,
- இலவசம்:
ஆதரவு தேடுவோருக்கான ஆலோசனை நிச்சயமாக இலவசமானதாகும். தேவைப்படுமாக இருந்தால் பல்கலாச்சாரம் அறிந்த ஒரு மொழிபெயர்ப்பாளர் கலந்துரையாடலுக்காக அழைக்கப்படுவார். இந்தச் செலவையும் ஆலோசனை நிலையம் பொறுப்பேற்கும்:
இனப்பாகுபாட்டு ஒதுக்குதல்கள் என்பதன் வரையறை
இனப்பாகுபாட்டு ஒதுக்குதல்கள் என்பது, மனிதர்களை அவர்களின் உடலியல் பண்புகள், இனத்தோற்றம், கலாச்சார நடைமுறைகள் (மொழி, பெயர்) அல்லது மதசார்பு ஆகியவற்றின் அடிப்படை காரணமாக, உரிமைகளைப் பறிக்கும் எந்தவொரு நடைமுறையும், அவர்களை நியாயமற்ற அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத அளவில் பின்தள்ளப்படுவது, அவமானப்படுத்துவது, அச்சுறுத்துவது அல்லது அவர்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவிப்பது போன்றதாகும். இது அன்றாட வாழ்வில், தொழிலில், வசிப்பிடத்தில், பாடசாலையில், விளையாட்டில், தனிப்பட்ட வாழ்வில், பொதுமக்களுக்கான திணைக்களங்களில் அல்லது வீதிகளில் ஏற்படலாம்.
இனப்பாகுபாட்டு ஒதுக்குதல்கள் முதன்மையாக அதன் விளைவுகளையே கவனத்தில் எடுக்கின்றது, அதன் நோக்கத்தைப் பற்றியது அல்ல.
இனப்பாகுபாட்டு ஒதுக்குதல்களின் வடிவங்கள்
ஒரு நேரடி ஒதுக்குதல் என்பது ஒரு நபரின் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிலான குறைபாடாகும், இது நேரடியாக ஒரு உண்மையான விடயத்தில் அல்லது அனுமானிக்கப்படும் தனிப்பட்ட பண்புகள் குறித்ததாகும்.
ஒரு மறைமுகமான ஒதுக்குதல் என்பது, அனுமதிக்கப்பட்ட அல்லது நடுநிலைமையான வழிகாட்டுதல்கள் சில குழுக்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகும்.
பலவித ஒதுக்குதல்கள் என்பது, ஒரு நபர் ஒரே நேரத்தில் பல்வேறு பின்தங்கல்கள் உள்ளவராக இருந்து ஒதுக்கப்படுவதாகும் (உ.ம். தோற்றம் / மற்றும் இயலாமை/ பாலினம் / பாலியல் நோக்கு/ வயது).
மேலதிக தொடர்பு இணைப்புகள்
பின்வரும் தொடர்பு இணைப்புக்களில் நீங்கள், இன ஒதுக்குதல்கள் மற்றும் அன்றாட வாழ்வில் இன ஒதுக்குதல்களைக் கையாள்வது குறித்த நடைமுறை உதவிக் குறிப்புகள் மற்றும் நீங்கள் அதற்கு எதிராக என்ன செய்யலாம் என்ற தகவல்களைக் காணலாம்.